internet

img

பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் வழக்கம்போல் செயல்படும் - பேஸ்புக் அறிவிப்பு

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை நேற்று திடீரென முடங்கிய நிலையில், தற்போது சரி செய்யப்பட்டு விட்டதாகவும், வழக்கம் போல் செயல்படும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

நேற்று மாலை பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் முடங்கின. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் ஒரே நேரத்தில் இந்த செயலிழப்பு நிகழ்ந்தது.

இந்த நேரத்தில் வலைத்தள பயனாளர்களால் தங்கள் கணக்குகளில், வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய முடியாமலும், புகைப்படத்தை மாற்ற முடியாமலும் போனது. இதனால் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. 

இதனையடுத்து #Whatsappdown, #Facebookdown ஆகிய ஹேஷ்டாக்குகளை டுவிட்டரில் பகிரப்பட்டது. மேலும் பல்வேறு தரப்பினரும் இதனால் அவதிக்குள்ளானார்கள். இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை  சரி செய்யப்பட்டு விட்டதாகவும், வழக்கம் போல் செயல்படும் என்றும் பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.